புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே சூப்பர் பூமி எனப்படும் நாம் வாழும் பூமியை போன்று ஒரு கிரகம் இருந்ததாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

 


 

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு சூரிய குடும்பத்தில் தற்போது இருப்பதை விடப் பல கிரகங்கள் இருந்ததாகவும் சூரியனைச் சுற்றி கிரகங்கள் உண்டாகத் தொடங்கிய புதிதில் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே சூப்பர் பூமி எனப்படும் நாம் வாழும் பூமியை போன்று ஒரு கிரகம் இருந்ததாகவும் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

சூப்பர் பூமி பூமியை விட மிகப் பெரிய கிரகம் நெப்டியூனை விடச் சிறிது என்றும் புதனுக்கும் சூரியனுக்கும் இடையே சுற்றி வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த சூப்பர் பூமி கிரகம் சூரியனுக்கு மிக அருகிலுள்ள சுற்றி வந்ததால் அது மெல்ல மெல்ல சூரியனை நோக்கி ஈர்க்கப் பட்டு இறுதியில் சூரியனுக்குள் மூழ்கி அழிந்து போய் விட்டதாகக் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசாவின் கெப்ளர் விண் தொலைக் காட்டியால் பால்வெளி அண்டத்தில் கண்டறியப்பட்டு வரும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பான இயற்கை அமைப்பை அல்லது உயிர் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கையைக் கொண்டுள்ள கிரகங்கள் காணப்பட்டு வருவதுடன் அவை அனைத்தும் சூப்பர் ஏர்த் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment