************************************************************************

17,140 பணியிடங்கள் காலி: பாரத் ஸ்டேட் வங்கி வெளியீடு

பாரத் ஸ்டேட் வங்கியில் இளநிலை உதவியாளர் பணிக்கு 17,140 பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணபிக்க கடைசி நாள் ஏப்ரல் 25-ஆம் தேதி.
 

SBI LOGO

பாரத் ஸ்டேட் வங்கியில் இளநிலை இணை உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்து 726 இடங்களும், இளநிலை இணை வேளாண்மை உதவியாளர் பணிக்கு 3 ஆயிரத்து 8 இடங்களும், சிறப்பு இளநிலை இணை உதவியாளர் பணிக்கு 3 ஆயிரத்து 218 இடங்களும், மேகாலயா மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு 188 இடங்களும் உள்ளன. மொத்தம் 17 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 

வேளாண்மை உதவியாளர் பணிக்கு விவசாய பட்டப்படிப்பு மற்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பணியில் சேரும் போது, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

 

பணிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது, அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சமூகப்பிரிவுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பு உண்டு.

 

தேர்வு கட்டணம் ரூ.600, ஆதிதிராவிடர்களுக்கான கட்டணம் ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் மூலமாக தான் செலுத்த வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

 

முதன்மை தேர்வு அடுத்த மாதம் 11ஆம் தேதியும், மெயின் தேர்வு 17ஆம் தேதியும் நடக்கவுள்ளது. விண்ணப்பித்தவர்கள் தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன் ஹால் டிக்கெட்டை பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் நிலையில் காலியாகவுள்ள 2  பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல் மற்றும் இன சுழற்சிக்குரிய சான்றிதழ்களின் நகல்களுடன் ஆணையர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் என்ற முகவரிக்கு பிப். 18ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 1.7.2014ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

   மேலும், மிதிவண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும். ஒட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு பணியிடம் பொதுப் பிரிவினர் முன்னுரிமைப் பெற்றவருக்கும், மற்றுமொரு பணியிடம் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்- ஆதரவற்ற விதவை) முன்னுரிமை பெற்றவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தகுதியுள்ள விண்ணப்பிக்கலாம்


 

திருச்செங்கோட்டில் நாளை  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செங்கோட்டில் வரும் புதன்கிழமை(பிப்.11) நடைபெறவுள்ளது.

 லையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு இந்த முகாம் நடைபெறுகிறது. 

 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலைவாய்ப்பற்றவர்கள், முகாம் நடைபெறும் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.தொழில்நுட்ப கல்லூரிக்கு காலை 9 மணிக்குள் வர வேண்டும். முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்துவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-281131 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் நிலையில் காலியாகவுள்ள 2 பணியிடங்கள், இன சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல் மற்றும் இன சுழற்சிக்குரிய சான்றிதழ்களின் நகல்களுடன் ஆணையர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் என்ற முகவரிக்கு பிப். 18ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

  விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 1.7.2014ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

   மேலும், மிதிவண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும். ஒட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு பணியிடம் பொதுப் பிரிவினர் முன்னுரிமைப் பெற்றவருக்கும், மற்றுமொரு பணியிடம் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்- ஆதரவற்ற விதவை) முன்னுரிமை பெற்றவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  எனவே, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 62 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: உ.பி. காசியாபாத்தில் தேசிய உயிர் வேளாண்மை மையத்தில் இளநிலை அறிவியல் அதிகாரி

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நுண்ணுயிரியல் அல்லது தாவரவியல் அல்லது தாவர நோய்க்குறியியல் அல்லது பூஞ்சை காளான் ஆய்வியல் போன்ற ஏதாவதொரு துறையில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மத்திய சுகாதார சேவை நிலையத்தில் சிறப்பு மருத்துவர்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் மருந்தியலில் எம்.டி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் சிறுநீரகவியல் சிறப்பு உதவி பேராசிரியர்கள்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் நெப்ராலஜி அல்லது நெப்ராலஜி அறுவை சிகிச்சை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

பணி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் மயக்கவியல் துறையில் உதவி பேராசிரியர்கள்

காலியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் மயக்கவியல் துறையில் எம்.டி., அல்லது எம்.எஸ்., மற்றும் போதிக்கும் திறனில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: இந்திய சுரங்கங்களில் துணை கட்டுப்பாட்டு அதிகாரி

காலி்யிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மைனிங் துறையில் பி.இ., மற்றும் மேற்பார்வையாளராக 10 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: சண்டிகார் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை மூத்த விரிவுரையாளர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,600.

வயது வரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் + அறுவை சிகிச்சை அல்லது பொது அறுவை சிகிச்சை துறையில் முதுகலை பட்டம். மற்றும் 3 வருடம் போதிக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: சண்டிகார் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூத்த நுண்ணுயிரியல் விரிவுரையாளர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,600.

வயது வரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் + மருத்துவ நுண்ணுயிரியல் துறையில் எம்.டி அல்லது எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: சண்டிகார் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்தப்பிரிவு துறை மூத்த பேராசிரியர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,600.

வயது வரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் இம்யூனாலஜி துறையில் டிப்ளமோ அல்லது நோய்க்குறியியல் துறையில் எம்.டி மற்றும் 2 வருடங்கள் போதிக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: சண்டிகார் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காசநோய் மற்றும் நுரையீரல் நோய்கள் பிரிவில் மூத்த பேராசிரியர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,600.

வயது வரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் காசநோய், நுரையீரல் நோய்கள் துறையில் எம்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: சண்டிகார் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் நோய் பிரிவில் மூத்த விரிவுரையாளர்கள்

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,600.

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் குழந்தைகள் நோய் துறையில் எம்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: சண்டிகார் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரேடியா டயாக்னசிஸ் பிரிவில் மூத்த விரிவுரையாளர்கள்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,600.

வயது வரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் ரேடியாலஜி துறையில் எம்.டி., அல்லது எம்.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதை நெட்பேங்கிங் மூலமோ அல்லது ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியின் கிளைகளிலோ செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 


 மத்திய கிட்டங்கி கழகத்தில் மேலாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மத்திய கிட்டங்கி கழகத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: பொது மேலாளர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.85,579.

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: பொது மேலாளர்: (எப் அண்ட் ஏ)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.85 ,579.

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: துணை மேலாளர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.65,175.

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவி பொது மேலாளர்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.49,327.

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவி பொது மேலாளர் (அக்கவுன்ட்ஸ்)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.49,327

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்..

பணி: உதவி பொது மேலாளர் (டெக்னிக்கல்)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.49,327

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: மேலாளர்

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,809.

பணி: மேலாளர்: (அக்கவுன்ட்ஸ்)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.40,809.

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

GENERAL MANAGER,

Central Warehousing Corporation,

4/1, Siri Institutional Area,

August Kiranti Marg,

Hauz Khas,

NEWDELHI 110 016.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2015.

மேலும் ஒவ்வொரு பணிக்கான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் www.cewacor.nic.in இணையதளத்தை பார்க்கவும்.


 CDAC நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்ள்: 03

பணி: Project Technician-I

வயது வரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  Hardware மற்றும் Networking பிரிவில் ஐடிஐ முடித்து 3வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior HRD Officer Centre for Development of Advanced Computing,

Gulmohar Cross Road No. 9,

Juhu, Mumbai 400049

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in/index.aspx?id=ca_job_mumbai1 என்ற இணையதளத்தை பார்க்கவும்


 ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் பணி

மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி எனப்படும் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையின் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 14 – 22க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் ஒட்டு மொத்த மதிப்பெண்களும்

குறைந்த பட்சம் 40 சதவீதமாக இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்கள் இருந்தால் அப்படிப்பை என்.சி.வி.டி., அல்லது எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் பயிற்சி கால உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ofbindia.gov.in/download/advt_54TA.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


சி.ஐ.எஸ்.எப் காவல் படையில் பணி

பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப் காவல்  படையில் காலியாக உள்ள ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 561 ( ஆண்- 531, பெண்கள்- 53)

பணி: ஹெட் கான்ஸ்டபிள்

வயது வரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: +2 முடித்திருக்க வேண்டும்.

உடல் தகுதி: ஆண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் உயரம் 165 செ.மீ, பெண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் உயரம் 155 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஸிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் தேர்வு, எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு மற்றும் மருத்துவப்பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50.  இதனை போஸ்டல் ஆர்டராக Asstt.Comdt (DDO) CISF, South Zone, Chennai என்ற பெயரில் GPO, CHENNAI -ல் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

DIG, CISF (South Zone)

Rajaji Bhawan “D” Block,

Besant Nagar, Chennai-90

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_16_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


KELTRON நிறுவனத்தில் ஆஃப்ரேட்டர் பணி

கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:Kerala State Electronics Development Corporation Limited

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

பணி: Operator

பணியிடம்: திருவனந்தபுரம்

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 10,000

பணி: ஒப்பந்த அடிப்படையிலானது.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.250. SC,ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை www.onlinesbi.com மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://swg.keltron.org/Resume/spg_operator_advtj.php?aplnid=1000 என்ற இணையதளத்தை பார்க்கவும்.


விளையாட்டு வீரர்களுக்கு கப்பற்படையில் பணி

கப்பற்படையில் செயிலர் பணிக்கு விளையாட்டு வீரர்களுக்கு உரிய 01/2015 BATCH-க்கு தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Director Entry Petty Officer

வயதுவரம்பு: 17 – 22க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Secondary Recruitment (SSR)

வயதுவரம்பு: 17 – 21க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Matric Recruits (MR)

வயதுவரம்பு: 17 – 21க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Non-Matric Recruits (NMR)

வயதுவரம்பு: 17 – 21க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: பயிற்சி காலத்தில் மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2000 மற்றும் இதர சலுகைகள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary, INDIAN NAVY SPORTS CONTROL BOARD, 7th FLOOR, CHANKYA BHAVAN, INTEGRATED HEAD QUARTERS, MoD (NAVY), NEW DELHI – 110021

மேலும் ஒவ்வொரு பணிக்கான தனித்தனியான தகுதிகள் மற்றும் உடற் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nausenabharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மும்பை கப்பல் கட்டும் தளத்தில் பணி

மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் (Naval Dockyard) காலியாக உள்ள 264 பணியிடங்களை நிர்ப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Boats Crew LASCAR-I

காலியிடங்கள்: 207

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். கப்பல் அல்லது விசைப்படகில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Boats Crew FIREMAN

காலியிடங்கள்: 57

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Ship அல்லது Craft-ல் 3 வருடம் Fireman ஆக பணியாற்றிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.godiwadabhartee.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை பார்க்கவும். 


மணிப்பூர் கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

மணிப்பூர் கிராமிய வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multi-purpose) பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Manipur Rural Bank

காலியிடங்கள்: 13

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Officer Scale I – 09

சம்பளம்: மாதம் ரூ.32,560

2. Office Assistant (Multipurpose) – 04

சம்பளம்: மாதம் ரூ.16,800

வயது வரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.100. SC, ST, PH பிரிவினருக்கு ரூ. 20.

விண்ணப்பிக்கும் முறை: www.manipurruralbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2015

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.manipurruralbank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


ஆயுத தொழிற்சாலையில் மஸ்தூர் பணி

இந்திய இராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள மஸ்தூர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Adm Officer (Rect.Cell), 8, Mountain Division Ordance Unit, Pin – 909008, C/o 56 APO.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_218_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


தில்லி ஐஐஐடியில் பணி

தில்லி ஐஐஐடியில் (Indraprastha Institute of Information Technolog) காலியாக உள்ள 9 உதவி மேலாளர், ஜூனியர் மேலாளர், மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2015

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Manager/Junior Manager(Academics/HR/IRD) – 05

பணி: Manager (Internship & placements) – 01

தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலையில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iiitd.ac.in/sites/default/files/docs/positions/IIITD2015Ad1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


ஐடிஐ தகுதிக்கு இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் Semi-skilled பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: PD/WC/31.01.2015

தேதி: 29.01.2015

பணி: Semi-Skilled Workmen

காலியிடங்கள்: 25

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter, Welder, Turners பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6,970 – 13,700

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 33-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐயில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.02.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (HR), Hindustan Shipyard Ltd., Gandhigram(Po), Visakhapatnam-530005.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hsl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 


எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) கட்டுப்பாட்டில் தில்லியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவமனை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Dr.RML Hospital – 226

2. Safdarjung Hospital – 150

3. LHMC & Smt.Suchita Kirplani Hospital – 266

4. Kalwati Saran Children's Hospital – 52

மேலும் தகுதி, அனுபவம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.aiimsexams.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.


அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்டில் All India Institute of Ayurveda (AIIA) குறைந்த கால ஒப்பந்த அடிப்படையில் நேரடி முறையில் நியமனம் செய்யப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: AIIA/Rectt/01/2014

பணி: Professor – 12

வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.10,500

பணி: ASSOCIATE PROFESSOR – 14

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37400 – 67000 + தர ஊதியம் ரூ.9000

பணி: ASSISTANT PROFESSOR – 14

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15600 – 39100 + தர ஊதியம் ரூ.8000

பணி: DY. MEDICAL SUPERINTENDENT – 01

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15600 -39100 + தர ஊதியம் ரூ.6600

பணி: MEDICAL OFFICER (CASUALTY)- 02

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400

பணி: MEDICAL OFFICER (BLOOD BANK) – 01

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15600 – 39100 + தர ஊதியம் ரூ.5400

பணி: NURSING SUPERINTENDENT – 01

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15600 – 39100 + தர ஊதியம் ரூ.5400

இந்தி மொழிப்பெயர்பாளர், கணக்காளர், பண்டக காப்பாளர் போன்ற இன்னும் பிற பணியிடங்கள் விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கவும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சி மற்றும் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

"The Director, All India Institute of Ayurveda (AIIA) Gautampuri, Sarita Vihar, Mathura road, NEW DELHI-110076".

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு , துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் வயதுவரம்பு சலுகை, பணிவாரியான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ccras.nic.in/Advt/recruitment/aiia/details.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


எம்பிஐ நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி

மீட் புரடெக்ட் ஆப் இந்தியா லிமிடெட் (Meat Products of India Limited) நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Management Trainee (Finance) – 01

தகுதி: பி.காம்., சிஏ, ஐசிடபிள்யூ, எம்பிஏ போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

பணி: Livestock Inspector Trainee – 01

தகுதி: VHSE in Livestock Management முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.meatproductsofindia.com/vacancies.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

சென்னை, ஜன. 23: தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தலைமைச் செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் வருகிற 28-இல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து  விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மின்சாரத் துறையில் பொறியாளர் பணி

மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் (என்எச்பிசி) மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பயிற்சி பொறியாளர்

காலியிடங்கள்: 87

கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட எல்க்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் அண்ட் ஹை வோல்டேஜ், பவர் எஞ்சினியரியங் போன்ற துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 பத்தாம் வகுப்பு தகுதிக்கு விமானப்படையில் பணி

இந்திய விமானப்படையில் "ஈஸ்டர்ன் கமாண்ட்" எனும் கிழக்குப் பிரிவின் தலைமைக் கிளையில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க், குக், மெஸ் ஸ்டாஃப், சஃபைவாலா போன்ற 85 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 85

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பணிகளுக்கேற்ப பத்தாவது, +2, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ப்ரொபேஷ்னரி உதவி மேலாளர் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள ப்ரொபேஷ்னரி உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

பணி: Probationary Asst Manager

வயது வரம்பு: 31.12.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: வணிகவியல், வணிக நிர்வாகம் மற்றும் கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பிலி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் பெயரில் ண்டும். தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படத்தை ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd., Head Office, # 57, V.E. Road, Thoothukudi-628002.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2015.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: கடைசி தேதி: 13.02.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://career.tmb.in/jobinfo.htm?job_num=AM1501 என்ற இணையதளத்தை பார்க்கவும்.


கயிறு வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான கயிறு வாரியத்தில் (COIR BOARD) அப்ரண்டிஸ் சட்டம் 1961ன் படி அளிக்கப்பட உள்ள பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டிஸ் பயிற்சி

காலியிடங்கள்: 07

கல்வித்தகுதி: Computer Operator's Programming Assistant பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஒரு வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.9,600 உதவிதொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.01.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary, Coir Board, Coir House, MG Road, Kochi – 16

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.coirboard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 800 காவலர் பணி

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) அகில இந்திய அளவில் காலியாக உள்ள 800 காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 19.01.2015 தேதியின்படி 18 – 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஓபிசியினருக்கு 3 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி விவரங்கள்:

உயரம்: 170 செ.மீ.,

மார்பளவு: குறைந்த பட்சம் 80 செ.மீ., (5 செ.மீ., விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.)

தூரப்பார்வை கண்ணாடி அணியாமல் குறைந்தது 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் சிறந்த பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடல் அளவுகள் அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை 'Assistant Commandant/DDO CISF,Southzone'என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கூடுதல் விவரங்களுக்கு http:www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DIG, CISF (South Zone),
Rajaji Bhawan, “D“ Block,
Besant Nagar,
CHENNAI 600090.
Tamilnadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2015.


என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் பணி

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் கீழ் அக்டோபர் 2015 குறுகிய கால கமிஷனின் 38-வது கோர்சில் சேர (எஸ்எஸ்சி தொழில்நுட்பம் அல்லாத) என்சிசி 'சி' சான்றிதழ் பெற்ற திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

என்சிசி – ஆண்கள்:
காலியிடங்கள்: 50.

என்சிசி பெண்கள்:
காலியிடங்கள் 04

வயது வரம்பு: 19 – 25க்குள் இருக்க வேண்டும். (அதாவது விண்ணப்பதாரர்கள் 02.07.1990க்கு முன் மற்றும் 1.7.1996க்குப் பின் பிறந்திருக்கக் கூடாது)

கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் என்சிசி சீனியர் டிவிசனில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக்கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதிகள் விவரம்:

ஆண்கள் – 157.5 செ.மீ.,

பெண்கள் – 152 செ.மீ.,

கண் பார்வை: 6/6, 6/18.

எடை: ஆண்கள் வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். பெண்கள்: 42 கிலோ

உரசும் முட்டுகள், தட்டையான பாதங்கள் இல்லாமல், காதுகள் சாதாரணமாக கேட்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

எந்தவொரு நோயும் இல்லாமல் நல்ல உடல் நிலை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு குழுத் தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 5 நாட்கள் நடைபெறும் 2ம் கட்டத்தேர்வில் மருத்துவத்தேர்வும் அதன் பின்னர் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

இறுதியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னி அகாடமியில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ராணுவத்தில் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,400. பயிற்சியின் போது ரூ.21,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அருகிலுள்ள எந்த ஓசி என்சிசி யூனிட்டிலிருந்து என்சிசி 'சி' சான்றிதழ் பெற்றார்களோ அந்த யூனிட்டிற்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2015.

போரில் வீரமரணம் அடைந்த, காயமடைந்த, மாயமான, வீரர்களின் வாரிசுகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.02.2015க்கு முன் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dte.Gen.of Recruiting/Rtg.A. NCC Entry,

AG's Branch, IHW of MOD (Army),

West BlockIII,

R.K. Puram,

NEWDELHI 110066.

மேலும் விண்ணப்பதாரர்களின் எழும் சந்தேகங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் கொல்கத்தா மண்டலத்தின் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: பொது சுரங்க பாதுகாப்பு இயக்குனரகத்தில் டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட் – 01
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: இயற்பியல், கணிதம், புள்ளியியல், ஆபரேஷனல் ரிசர்ச், கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மத்திய நுகர்வோர் துறையின் கீழ் உள்ள தேசிய பரிசோதனை மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: (பிசிக்கல் – சிவில்) – 05
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: பயன்பாட்டு இயற்பியல் அல்லது வேதியியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது கெமிக்கல் டெக்னாலஜி, கெமிக்கல், சிவில் பி.இ., மற்றும் பரிசோதனை மையத்தில் சிவில் இன்ஜினியரிங் மெட்டீரியலை ஆய்வு செய்வதில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர் – 02
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல்துறைகளில் பி.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம்.

பணி: தேசிய வரைபடம் அமைப்பில் ஜூனியர் புவியியல் உதவியாளர் – 01
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: புவியியல், புள்ளியியல், கணிதம் போன்ற துறைகளில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மத்திய மருந்து பரிசோதனை மையத்தில் சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் – 02
வயது வரம்பு:  27.1.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: பாக்டீரியாலஜி அல்லது நுண்ணுயிரியல் அல்லது உயிரி வேதியியல் அல்லது மருந்தியல் அல்லது உடல் இயக்கவியல் அல்லது வேதியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sscer.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 

புதுதில்லி அரசில் 1223 பல்வேறு பணி

புதுதில்லி அரசு மற்றும் அதன் கீழ் செயல்பட்டும் துறைகளில் காலியாக உள்ள 1223 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தில்லி சபார்டினேட் சர்வீசஸ் செலக்ஷன் போர்டு அறவித்துள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர்
காலியிடங்கள்: 12

பணி: நூலகர்
காலியிடங்கள்: 03

பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 04

பணி: உதவி இன்ஜினியர் (சிவில்)
காலியிடங்கள்: 03

பணி: பார்மசிஸ்ட்
காலியிடங்கள்: 11

பணி: ஸ்டாப் நர்ஸ்
காலியிடங்கள்: 02

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03

பணி: பீல்டு அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 07

பணி: ஷிப் மாடலிங் இன்ஸ்ட்ரக்டர்
காலியிடங்கள்: 01

பணி: ஷிப் மாடலிங் ஸ்டோர்கீப்பர்
காலியிடங்கள்: 02

பணி: ஸ்விம்மிங் கோச்
காலியிடங்கள்: 07

பணி: ஸ்விம்மிங் லைப் கார்டு
காலியிடங்கள்: 07

பணி: நூலகர்
காலியிடங்கள்: 09

பணி: இசை ஆசிரியை
காலியிடங்கள்: 62

பணி: ஓவிய ஆசிரியை
காலியிடங்கள்: 202

பணி: அறிவியல் ஆசிரியர்
காலியிடங்கள்: 117

பணி: உடற்கல்வி ஆசிரியர்
காலியிடங்கள்: 424

பணி: ஸ்டெனோகிராபர் (நிலை – 3)
காலியிடங்கள்: 47

பணி: சூப்பர்வைசர்கள் (நிலை – 2)
காலியங்கள்: 290

பணி: மேலாளர் (சிவில்)
காலியிடங்கள்: 01

பணி: துணை மேலாளர் (டிராபிக்)
காலியிடங்கள்: 01

பணி: மேலாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01

பணி: துணை கண்காணிப்பு அதிகாரி
காலியிடங்கள்: 01

பணி: துணை பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள்: 01

பணி: தொழிலாளர் நலத்துறை அதிகாரி
காலியிடங்கள்: 02

பணி: சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்
காலியிடங்கள் 01

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2015.

பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://dsssb.delhigov.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


செயில் நிறுவனத்தில் 558 டெக்னீசியன் பணி

மத்திய அரசின் நேரடிப் பார்வையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனத்தின் ‘பிலாய் ஸ்டீல் பிளான்ட்’ கிளையில் அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்), ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) பொன்ற 558 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் கலியிடங்கள் விவரம்:

1. அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) – 119

2. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) – 414

3. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பாய்லர் ஆபரேஷன்) – 25

வயது வரம்பு: 01.12.2014 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க வேண்டும். பாய்லர் ஆபரேட்டர் பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்க தகுதியனவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி. பிரிவினருக்கு ரூ.150. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2015

மேலும் முழுமையன விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


HPCL நிறுவனத்தில் பொறியாளர் பணி

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு அமைந்திருக்கும்.

பணி: பட்டதாரி பொறியாளர்

1. Civil Engineer

2. Electrical Engineer

3. Mechanical Engineer

4. Electronics & Telecommunication Engineer

5. Instrumentation Engineer

6. Chemical Engineer

வயது வரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: முழுநேர படிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், குழு பணி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.260. இதனை எஸ்பிஐ வங்கியில் HPCL Powerjyoti கணக்கு எண் 32315049001  கிளைகளில் செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hpclcareers.com/ www.hindustanpetroleum.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/HPCL_GATE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


தேசிய நீர்மின் நிறுவனத்தில் டிரெய்னி பொறியாளர் பணி

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய நீர்மின் நிறுவனத்தில் (என்.எச்.பி.சி.) நிரப்பப்பட உள்ள 87 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிரெய்னி பொறியாளர்

காலியிடங்கள்: 87

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி(பொறியியல்) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/gate-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிகல் அஸிஸ்டெண்ட் பணி

இந்திய ரயில்வே துறையின் ஒரு அங்கமாக ரைட்ஸ் என அழைக்கப்படும் ரயில் இந்தியா டெக்னிகல் அண்டு எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள சிவில் துறையில் காலியாக உள்ள 17 டெக்னிகல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிகல் அஸிஸ்டெண்ட்

வயது வரம்பு: 01.01.2015 தேதியின் அடிப்படையில் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையின் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

விண்ணப்பிக்கும் முறை: http://new.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2015

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://new.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 1000 உதவியாளர் பணி

என்ஐசிஎல் என அழைக்கப்படும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் (National Insurance Company Ltd) நிரப்பப்பட உள்ள 1000 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2வுக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.11.2014 தேதியின் அடிப்படையில் 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 பாரத் பிராட்பேண்டு நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணி

மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் பைபர் ஆப்டிக்ஸ் நெட்வொர்க் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பாரத் பிராட்பேண்டு (Bharat Broadband Network Limited). இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் டிரெய்னி இடங்களை கேட் 2015 தேர்வு அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 21 – 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு: கேட் 2015 தேர்வில் இ.சி., சி.எஸ்., ஐ.டி., இ.இ., தாள்களில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களை அறிய http://www.bbnl.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் டெக்னிகல் பணி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ள இந்தியாவின் கோர் பிரிவைச் சார்ந்த இரும்பு உற்பத்தி நிறுவனமான செய்ல் நிறுவனத்தின் வர்த்தமான் ஆலையில் காலியாக உள்ள ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:  219

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. மெட்டலர்ஜி – 46

2. மெக்கானிக்கல் – 107

3. கெமிக்கல் – 10

4. எலக்ட்ரிக்கல் – 56

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250ய இதனை பர்ன்பூர் மாற்றத்தக்க வகையில் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் “Power Jyoti” என்ற பெயரில் 31932241266 என்ற கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/IISCO என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்டம், பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள 7 சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்கள் இன சுழற்சி

முறையில் நிரப்பப்படவுள்ளன.

விண்ணப்பங்களை உரிய கல்வித் தகுதி சான்றிதழின் நகல் மற்றும் இன சுழற்சிக்குரிய சான்றின் நகல்களுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முகவரிக்கு ஜன. 20-ம் பிற்பகல் 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 1.7.2014ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும், பொது போட்டி (பொது), ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை- ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் – பொது, 

பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) பொது, ஆதிதிராவிடர் – பொது ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர்கள் மற்றும்

பொது போட்டி (ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (ஆதரவற்ற விதவை பெண்கள்) ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை அற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 43

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Chief Manger (Law)- 03

வயதுவரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும்.

2. Chief Manger (IT)- 06

வயதுவரம்பு: 21 – 40க்குள் இருக்க வேண்டும்.

3. Senior Manager (IT)- 18

4. Senior Manager(Statistician)- 01

வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

5. Technical Officer (Civil)- 11

6. Technical Officer (Electrical)- 04

வயதுவரம்பு: 21 – 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம், பொறியியல் துறையில் இளங்களை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/recruitment/Spec_Officers_2014_15/ADVERTISEMENT-Specialist%20Officers_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


சுகாதார வள மையத்தில் ஆலோசகர், மேலளர் பணி

ஹரியானா மாநில சுகாதார வள மையத்தில் காலியாக உள்ள 43 District & State consultant , District Quality Manager & Administrative Assistant பேன்ற பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற ஜனவரி 15,16 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்கள்: 43

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. District Consultant (Quality Assurance)- 15

2. District Consultant (Public Health)- 15

சம்பளம்: மாதம் ரூ.40,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.01.2015 காலை 9.30 மணிக்கு

3. State Consultant (Quality Assurance)- 01

4. State Consultant (Public Health)- 01

சம்பளம்: மாதம் ரூ.50,000

5. District Quality Manager- 15

சம்பளம்: மாதம் ரூ.15,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.01.2015 காலை 9.30 மணிக்கு

6. Administrative Assistant (SQAU)- 01

7. Administrative Assistant (DQAU)- 15

சம்பளம்: மாதம் ரூ.12,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.01.2015 காலை 9.30 மணிக்கு

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://hshrc.gov.in/wp-content/uploads/Walk-in-Interview-for-filling-up-the-various-posts-under-HSHRC-on-contract-basis.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


HMT நிறுவனத்தில் மருத்தவர் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் HMT லிமிடெட் நிறுவனத்தின் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 8 மருத்தவர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: HMT Limited HMT MACHINE TOOLS LIMITED

காலியிடங்கள்: 08

பணி: மருத்துவர்

தகுதி: மருத்துவத்துறையில் எம்எஸ் அல்லது எம்டி முடித்திருக்க வேண்டும்.

பணி இடம்: பெங்களூர்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2015

முகவரி: HMT Limited HMT MACHINE TOOLS LIMITED BANGALORE COMPLEX,  BANGALORE – 560 013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Medical Officer, HMT Hospital, Jalahalli P.O., Bangalore – 560 013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hmtindia.com/html/frame.asp?page=careers.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.


ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கியில் ஆலோசகர் பணி

ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் வங்கியில் (SBM) நிரப்பப்பட உள்ள 10 ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (SBM)

பணி: Counsellors

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.14,500

பணி இடம்: மைசூர்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய State Bank of Mysore (SBM), Chief Manager, FI Department, State Bank of Mysore, Head Office. Phone 080-22282517, 22353901-09, Extn 473 தொடர்பு கொள்ளவும்.


 பட்டதாரிகளுக்கு மால்வா கிராம் வங்கியில் பணி

மால்வா கிராமிய வங்கியில் காலியாக உள்ள 32 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: மால்வா கிராமிய வங்கி

காலியிடங்கள்: 32

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Officer Scale-III – 02

2. Officer Scale-II (General Banking Officer)- 09

3. Officer Scale-II (IT- Information and Technology)- 02

4. Officer Scale-II (CA- Charted Accountant)- 01

5. Officer Scale-II (Law Officer- 01

6. Officer Scale-II (Agricultural Officer)- 01

7. Officer Scale-I- 16

வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 21 – 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: IBPS செப்டம்பர் , அக்டோபர் 2014 அன்று நடத்திய தேர்வில் பெற்ற மத்திப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.malwagraminbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.malwagraminbank.com/Draft%20Ad%20for%20MGB%20from%20IBPS%2001.01.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


பாட்னாவில் மாவட்ட நீதிபதி பணி

பாட்னா உயர் நீதிமன்றம் நிரந்தர மற்றும் தற்காலிகமான மாவட்ட நீதிபதி ((Entry Level)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 99

பணி: District Judge (Entry Level)

பணியிடம்: பாட்னா

சம்பளம்: மாதம் ரூ.51550 – 63070

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் Viva Voce சேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://patnahighcourt.bih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடங்கும் தேதி: 07.01.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://patnahighcourt.bih.nic.in/ViewPDF.aspx?File=UPLOADED/529.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.


3,589 கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
 இப்பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சி பெறாத விண்ணப்பதாரர்கள் பயிற்சி முடித்த 2 ஆண்டுகளுக்குள் கூட்டுறவுப் பட்டப் படிப்பை நிறைவு செய்ய வேண்டும்.
 விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதிப் படிப்பு அல்லது மேல்நிலைப் படிப்பின்போது தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 1-1-2012ல் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட் வகுப்பினர் 32 வயதையும், மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சாராத இதர விண்ணப்பதாரர்கள் 30 வயதையும் கடந்திருக்கக் கூடாது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாணைப்படி வயது வரம்பு விலக்களிக்கப்படும்.
 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் வகுப்பு வாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் வரும் டிச. 9-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.
 கோவை மாவட்டத்தில் விண்ணப்பப் படிவம் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகம் மற்றும் அவற்றின் கிளைகளில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
 இணைய தளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250ஐ வங்கி வரைவோலையாகப் பெற்று அவர்களின் சான்று இடப்பட்ட சாதிச் சான்றுடன் தனியாக ஒரு கடிதம் மூலம் மாநில ஆள் சேர்ப்பு நிலைய முகவரிக்கு வரும் நவ. 23-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்னர் கிடைக்கும்படி பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

 அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், என்.வி.நடராஜன் மாளிகை, எண். 170, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -600 010.


 திரிபுரா கிராமிய வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

திரிபுரா கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 49 Office Assistant (Multipurpose)பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: திரிபுரா கிராமிய வங்கி

காலியிடங்கள்: 49

பணி: அலுவலக உதவியாளர் (மல்ட்டிபர்ப்பஸ்)

துறைவாரியான கலியிடங்கள் விவரம்:

i. SC – 05

ii. ST – 28

iii. General- 16

வயது வரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: IBPS செப்டம்பர் / அக்டோபர் 2014 நடத்திய தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tripuragraminbank.org/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tripuragraminbank.org/tgb/new/pdf/REC_TGB_2014_FINAL.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10 வகுப்பு தகுதிக்கு மத்திய அரசு உணவு பொருள் கிடங்கில் பணி

ஹைதரபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் Warehousing Corporation-ல் காலியக உள்ள Ware house Assistant Grade-II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CWC/RO HYD/I-Admn./Estt./Rectt.WA-11-14-15

பணி: Ware house Assistant Grade-II

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.8,900 – 24,320

வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Central Warehousing Corporation, Hyderabad என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். SC, ST,PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Manager, Central Warehousing Corporation Rgional Office, Warehousing Sadan, Behind Gandhi Bhavan, P.B.No: 34, Nampally, Hyderabad – 500001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cewacor.nic.in/Docs/Recrutment%E2%80%8C_wag_II_hyd_191214.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பதவியில் காலியாக உள்ள 100 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 30.11.2014 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1984க்குப் பின்னரும் 30.11.1993க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்களும், ஆராய்ச்சி படிப்பு அல்லது சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., முதுகலை மேலாண்மைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல் கட்ட ஆன்லைன் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் தேர்வு, புள்ளியியல், நிதி மற்றும் மேலாண்மை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கள உதவியாளர் பணி

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF), Field Assistant பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகெள்ளுமறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Research Fellow (JRF)- 01

சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: Field Assistant – 01

சம்பளம்: மாதம் ரூ. 5000

தகுதி: அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை  Bio-Data தயாரித்துக் கொண்டு தேவையான சான்றிதழ் நகல்களை எடுத்துக் கொண்டு Dr. R. Rajaram, PI, Department of Marine Science, Bharathidasan University, Tiruchirappalli – 620024 என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2015 அன்று காலை 10.30 மணிக்கு

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bdu.ac.in/adv/JRF_MOES_Marine_Science.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி

மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) காலியாக உள்ள 800 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF)

மொத்த காலியிடங்கள்: 800

பணி: Constables, Fire

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2000

வயது வரம்பு: 18 – 23க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. SC,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

கல்வி தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_14_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய இராணுவத்தில் பெறியாளர் பணி

இந்திய இராணுவத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2658

நிறுவனம்: இராணுவ பொறியாளர் பணியாளர் தேர்வு – 2014

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Draughtsman

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200.

பணி: Supervisor Barrack & Store (Supvr B/S)

காலியிடங்கள்: 64

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200.

பணி: Store Keeper Grade-II:

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Civil Motor Driver (OG)

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Peon

சம்பளம்: மாதம் ரூ.86

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Chowkidar

காலியிடங்கள்: 58

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ..1800

பணி: Safaiwala

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Chowkidar (Khansama)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Meter Reader

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Caneman

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Mate (SSK)

காலியிடங்கள்: 2265

சம்பளம்: மாதம் ரூ.5200 – 0200 + தர ஊதியம் ரூ.1800

பணி: அமீரகம்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200-

பணி:மேற்பார்வையாளர் பாராக் மற்றும் அங்காடி

காலியிடங்கள்: 64

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: ஸ்டோர் கீப்பர்

காலியிடங்கள்: 11

சம்பளம்: ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: சிவில் மோட்டார் டிரைவர் (OG)

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: கையாள்

காலியிடங்கள்: 86

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Chowkidar

காலியிடங்கள்: 58

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Safaiwala

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Chowkidar (Khansama)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: மீட்டர் ரீடர்

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ. Rs.5200-20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Caneman

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Mate (SSK)

காலியிடங்கள்: 2265

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.1800

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:

மெட்ரிகுலேஷன் அல்லது +2 தேர்ச்சி,  Diploma in Architectural Assistantship,  Civil, Mechanical, Electrical பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2015

தேர்வு நடைபெறும் தேதி: 14.02.2015

மேலும் முழுமையன விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி பணி

என்ஐசிஎல் என அழைக்கப்படும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் (National Insurance Company Ltd) நிரப்பப்பட உள்ள 362 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 362

பணி: நிர்வாக அதிகாரி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Finance – 60

2. Legal – 60

3. Automobile Engineering – 30

4. Information Technology – 20

5. Total Specialist – 170

6. Generalist – 192

சம்பளம்: மாதம் ரூ.17,240 – 32,640

தகுதிகள்: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.11.2014 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும்: ஆன்லைன் தேர்வு முடிவுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

1. SC,ST,PWD,EXS,DXS பிரிவினருக்கு ரூ.50. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.600.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி: 05.01.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015

மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://nationalinsuranceindia.nic.co.in/recruitment/Officers_Recruitment_2014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய நீர்மின் நிறுவனத்தில் டிரெய்னி பொறியாளர் பணி

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய நீர்மின் நிறுவனத்தில் (என்.எச்.பி.சி.) நிரப்பப்பட உள்ள 87 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிரெய்னி பொறியாளர்

காலியிடங்கள்: 87

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி(பொறியியல்) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/gate-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பொறியாளர் பணி

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு அமைந்திருக்கும்.

பணி: பட்டதாரி பொறியாளர்

1. Civil Engineer

2. Electrical Engineer

3. Mechanical Engineer

4. Electronics & Telecommunication Engineer

5. Instrumentation Engineer

6. Chemical Engineer

வயது வரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 30.06.1990 பிறகு பிறந்திருக்கூடாது.

கல்வித்தகுதி: முழுநேர படிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், குழு பணி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.260. இதனை எஸ்பிஐ வங்கியில் HPCL Powerjyoti கணக்கு எண் 32315049001  கிளைகளில் செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hpclcareers.com/ www.hindustanpetroleum.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/HPCL_GATE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விஜயா வங்கியில் கிளார்க் பணி

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 8 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கிளார்க்

காலியிடங்கள்: 08

வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.7,200 – 19,300

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. SC,ST பிரிவினருக்கு ரூ.50. இதனை பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் “Vijaya Bank, Recruitment (Sportsmen) Project, 2015" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vijayabank.com/UserFiles/vijayabank/file/Santhosh/Recruitment%20of%20sportspersons%202014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள CREDIT OFFICERS,BRANCH HEADS, INSPECTOR OF BRANCHES–(IOB), Law Officers போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: CREDIT OFFICERS
தகுதி: முதுகலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 – 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: சென்னை போன்ற பெருநகரங்களில்

பணி: BRANCH HEADs
தகுதி: முதுகலை பட்டத்துடன் CAIIB/ICWA முடித்திருக்க வேண்டும். வங்கி துறையில் குறைந்தபட்சம் 7 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 – 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: இந்தியா

பணி: Law Officers
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: இந்தியா
தகுதி: சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருடம் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும்.

பணி: INSPECTOR OF BRANCHES–(IOB)
தகுதி: பட்டம் பெற்று தனியார் துறை வங்கிகளில் ஏழு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40 – 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Faculty at Staff Training College
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்
பணி இடம்: கரூர்
தகுதி: முதுகலை பட்டத்துடன் CAIIB முடித்திருக்க வேண்டும். வங்கி துறையில் குறைந்டபட்சம் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, HRD Department, The Lakshmi Vilas Bank Limited, Admn Office, New No. 4 (Old No.33), Sardar Patel Road, Guindy, Chennai -600032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/Recruitment_Credit_BH_IOB_Law_STC_Dec2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விளையாட்டு வீரர்களுக்கு தென் மேற்கு ரயில்வேயில் பணி

தென் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான 46 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 46

பணி: Sports Quota

I. Zonal Head Quarters Quota – 21

1. Athletics – 10

2. Cycling – 02

3.Volley Ball – 01

4. Basket Ball (Women) – 01

5. Swimming – 03

6. Cricket – 02

7. Chess – 02

II. Zonal Head Quarters Quota – 10

1. Athletics – 06

2. Cycling – 02

3. Volley Ball – 02

III. Hubli Division Quota – 05

1. Body Building – 02

3. Hockey – 02

IV. Bangalore Division Quota – 05

1. Table Tennis – 03

2. Shuttle Badminton – 02

V. Mysore Division Quota – 05

1. Basket Ball (Women) – 02

2. Power Lifting – 01

3. Weight Lifting – 02

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலத்தில் 30 வார்த்தைகளும், இந்தியில் 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத்துறை சாதனைகள் மற்றும் பொது நுண்ணறிவு திறன் அல்லது தட்டச்சு திறன் மற்றும் ஆளுமை திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.01.2015.

தொலை தூர பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.01.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.swr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேனா வங்கியில் பயிற்சியாளர் பணி

தேனா வங்கி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Faculty-RESTI பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தேனா வங்கி

மொத்த காலியிடங்கள்: 05

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 45-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சமூகவியல், உளவியல், எம்.ஏ ஊரக வளர்ச்சி, பி.எஸ்சி (விவசாயம்), பி.ஏ., பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. SC,ST,PH பிரிவினருக்கு ரூ.50. இதனை வங்கி செலாணை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.denabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Direct Recruitment to the vacancies for FORESTER , FIELD ASSISTANT:
 
TamilNadu Forest Uniformed  Services Recruitment Committee |  Applications are invited from 02-01-2015 to 30-01-2015 for Direct Recruitment to the vacancies for FORESTER , FIELD ASSISTANT | தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ளதாக மாநில வன சீருடைப் பணியாளர்

தேர்வுக்குழு அறிவித்துள்ளது. தமிழக அரசின் வனத்துறையில் வனவர் (ஃபாரஸ்டர்), வன காப்பாளர் (ஃபாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (ஃபாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்ய தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியம் இருப்பதைப் போல வனத் துறை ஊழியர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற புதிய தேர்வு வாரியத்தை தமிழக அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு வாரியம் மூலமாக முதல்முதலாக 165 வனவர்களும், அரசு ரப்பர் கழகத்துக்கு 16 கள உதவியாளர்களும் (மொத்தம் 181 காலியிடங்கள்) தேர்வு செய் யப்பட இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மாநில வன சீருடை பணியாளர் தேர்வுக்குழு வெளி யிட்டுள்ளது. பிஎஸ்சி, பி.இ. பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக் கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் எழுத்துத் தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு உடல்திறன் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் விற்பனை செய் யப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும். விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பம் வழங்கப்படும் தபால் அலுவலகங்கள், தேர்வு முறை, பாடத்திட்டம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங் களை தமிழக அரசின் வனத்துறை இணையதளத்தில் (www.forests.tn.nic.in) தெரிந்து கொள்ளலாம் என்று மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித் துள்ளது.


 

தபால்காரர், தபால் காப்பாளர் ( மெயில் கார்டு ) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு

தபால்காரர், தபால் காப்பாளர் ( மெயில் கார்டு ) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு ( ஹால் டிக்கெட் ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் டி . மூர்த்தி புதன்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு : அஞ்சலக கோட்டம், அஞ்சல் பிரிப்பக கோட்டங்களில் 797- தபால்காரர், 9- தபால் காப்பாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . தமிழக அஞ்சல் வட்டத்தால் , நவம்பர் 15- ஆம் தேதி காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது . இதற்கான தேர்வு டிசம்பர் 28- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறுகிறது . ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் . இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு www.dopchennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இதிலிருந்து தேர்வர்கள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வுக்கான இடமும் , நேரமும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது . அதைத் தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் . எக்காரணம் கொண்டும் தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


 

பட்டதாரிகளுக்கு சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் பணி

இந்தியாவின் முன்னணி வணிகவியல் வங்கியான சவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5 Probationary Clerks பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 05
பணி: Probationary Clerks
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.07.2014 தேதியின்படி 26-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.7200. 19,300 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. SC/ST பிரிவினருக்கு ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2014
விண்ணப்ப படிவம் மற்றும் டி.டி சென்று சேர கடைசி தேதி: 13.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 

சாமூண்டிஸ்வரி மின்சார கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உதவி பொறியாளர், கணக்கு அலுவலர் பணி

சாமூண்டிஸ்வரி மின்சார கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  உதவி பொறியாளர் மற்றும் உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Asst. Engineer
காலியிடங்கள்: 
39
தகுதி: எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியாளர் பணிக்கு சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் அல்லது AIME பிரிவில் A & B (சிவில்) முடித்திருக்க வேண்டும்.
 
பணி: Asst. Accounts Officer
காலியிடங்கள்:
 02
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  M.Com முடித்திருக்க வேண்டும் அல்லது ICWA/MBA(நிதி) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:  பொது பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.  SC/ST பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கர்நாடக அரசு இட  ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் I, IIA,IIB, IIIA, IIIB பிரிவினருக்கு ரூ.4000. SC/ST பிரிவினருக்கு ரூ.2000.
சம்பளம்:  பொறியாளர் பணிக்கு மாதம் ரூ 18.380 – 32.610.  உதவி கணக்கு அலுவலர் பணிக்கு மாதம் ரூ 18.380 – 32.610.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cescmysore.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்குhttp://www.cescmysore.org/sites/default/files/basic_files/EmploymentNotification.pdf என்ற  இணையதளத்தை பார்க்கவும்.
 

TISS ஜன.,10ம் தேதி நுழைவுத்தேர்வு

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நடத்தும் தேசிய நுழைவுத் தேர்வு (TISS-NET) ஜனவரி 10ம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 39 மையங்களில் இந்நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆப்ஜெக்டிவ் முறையில் கணினி மூலம் தேர்வு நடத்தப்படும்.

அனைத்து முதுகலைப் படிப்புகளுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க நவம்பர் 29 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் அனுப்ப டிசம்பர் 1 கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் மூன்று பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிஐஎஸ்எஸ் கேம்பஸில் இரண்டும், மற்ற இடங்களில் உள்ள டிஐஎஸ்எஸ் வளாகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இறுதியாக நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுச் செய்யப்படுவர். கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை அணுகலாம்.


 

ஐஐடி-புவனேஸ்வரில் JRF/SRF:

புவனேஸ்வரில் உள்ள  இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஆராய்ச்சி படிப்பு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆராய்ச்சியில் பல்வேறு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க எம்.டெக்., எம்.இ., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ரூ.500 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். மகளிருக்கு விண்ணப்ப கட்டணம் இலவசம்.

ஆன்லைனில் விண்ணப்பங்களைஅக்.,15 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்.,20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.


 

இந்திய ரயில்வே துறையில் – 6101 வேலை வாய்ப்புகள்!!

இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட 6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் 20.09.2014 முதல் 19.10.2014 வரை விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 6101.

வயது: 01.01.2015 அன்று, ஜூனியர் இன்ஜினீயர் பணிக்கு 18-33 வயதுக்குள்ளும், சீனியர் இன்ஜினீயர் பணிக்கு 20-35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வித் தகுதி: அறிவிக்கையில் வெளியான அட்டவணையில் உள்ள பணிகளுக்கு உரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினீயரிங்கில் பட்டயப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களும் அறிவிக்கையில் வெளியாகியுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் அதாவது ரூ.50,000க்கு குறைவான ஆண்டுவருமானம் கொண்டோர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிறர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ வங்கி செலான் மூலமாகவோ அஞ்சலகத்திலோ செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 14.12.2014 அன்றும் சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 21.12.2014 அன்றும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கோ சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கோ ஏதாவது ஒரு ஆர்ஆர்பி இணையதளத்தில் (http://www.rrbald.gov.in/ ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட்டை ஆர்ஆர்பி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை. எழுத்துத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆல்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2014.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrbald.nic.in/

http://www.rrbald.nic.in/redirect.html

This article has 14 comments

 1. u.muniyasamy(perinba kumar)

  i need a good job in civil engineering field, any our society helpers can help to get a good job to settle my life. having exp- 12 years more, age- 32, not married,now work at chennai in unbelived job..

  thanking you.

  • admin

   வணக்கம், தங்களின் தொடர்புக்கு நன்றி! வலைத்தளத்தை இன்னும் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் உதவியும் தேவை. மருதத்தில் புதுமையான மற்றும் தேவையானவற்றை வெளிக்காட்ட நீங்கள் ஒத்துழைக்கலாம். என்ன வரவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் ஆலோசனைகளைச் சொல்லலாம். மற்றவர்களிடம் மருதத்தைப் பார்க்கச் சொல்லவும். கருத்துகள் படைப்புகள் அனுப்பவும் உதவி செய்யலாம். செய்யுங்கள். நாம் வெல்லவேண்டும்!. மருதத்தின் நன்றி!

 2. ABR

  Hi. It is very nice website.Kindly update scholarship which is available to us and thadhco schemes.Because so many of them not aware of this

 3. Karuppasamy pandian

  i have been done diploma in Computer science in 2011 and BE/ECE in 2014.im intrested in working with our marutham channel and more intrested adout tamil language.
  Please reply fast at 9629285998

  • admin

   உங்கள் ஆலோசனை செயல்படுத்த நவம்பர் இரண்டாவது சனி தேனியில் சந்திக்கலாம்.

  • admin

   உங்கள் ஆலோசனை செயல்படுத்த நவம்பர் இரண்டாவது சனி தேனியில் சந்திக்கலாம்.

Leave a Comment