மாநில தேர்தல் கமிஷன் இணையதளம் செயல் இழந்துபோனது.
 


சென்னை, கோயம்பேட்டில் மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல் கமிஷனுக்கு என தனியாக, www.tnsec.tn.nic.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.

கடந்த காலத்தில், ஆங்கிலத்தில் இயங்கி வந்த இந்த இணையதளம், 2011 உள்ளாட்சி தேர்தல் முதல் தமிழில் செயல்படுகிறது.

இந்த இணையதளத்தில், உள்ளாட்சி தேர்தல், வேட்பாளர்கள் தகுதி, தேர்தல் முறை உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த இணையதளம் செயல்பட்டு வந்தது.

ஆனால், கடந்த பல மாதங்களாக, இந்த இணையதளம் செயலிழந்து, செத்துப்போனதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், செத்துப்போன இணையதளத்தை மீண்டும் செயல்படவைக்க மாநில தேர்தல் ஆணையர் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தமிழக அரசே நேரயாக களத்தில் குதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Comment