தமிழகத்தை ஆண்டு வரும் ஜெயலலிதா அரசுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


 
 
தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மந்தமாக இருந்த பாஜகவின் தேர்தல் பிரச்சாரமும் வேகம் எடுத்துள்ளது.
 
நேற்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வந்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். இன்று பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்தார். இதனால் சுறுசுறுப்பாக தேர்தல் வேலையில் களம் இறங்கியுள்ளனர் பாஜகவினர்.
 
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அதில் ஏராளமான இலவசங்கள் இடம் பெற்றன. இந்த தேர்தல் அறிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்தாலும், அதன் மீதான பயம் கண்டிப்பாக இருக்கும்.
 
இந்நிலையில் பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் அதிமுக அரசு கடனில் இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்படிருக்கும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற மேற்கொண்டு செலவாகும் என கூறியுள்ளனர்.
 
இது குறித்த டுவிட்டர் பதிவில், தமிழகத்தை ஆண்டு வரும் ஜெயலலிதா அரசுக்கு 4 லட்சம் ரூபாய் கோடி கடன் உள்ளது. இந்த கடனே அதிகம் என்ற நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள கற்பனைக்கும் எட்டாத இலவச திட்டங்களை அமல்படுத்த வேண்டுமானால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மேலும் 1.41 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment