0102

 


 

10897813_409723489192704_6549461326544157747_n

 961453_676068355843350_1652181189_n

 10884870_676068459176673_1100453821_n

 


திருச்செந்தூர் – மூவேந்தர் மரபினரான தேவேந்திரர் குல வேளாளர்களின் மடம் திறப்பு விழா

 

திருச்செந்தூர் பகுதியில் உள்ள 120 ஊர்களைச் சேர்ந்த மள்ளர் குல மக்கள் இணைந்து, திருச்செந்தூரில் நம் இனத்துக்குப் பாத்தியப்பட்ட மடம் ஒன்றின் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய மடம் ஒன்றைக் கட்டி எழுப்பியுள்ளார்கள் . இதன் திறப்பு விழா  03-10-2014 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணியளவில் நடைபெறுகிறது. திறப்பாளர் திருமிகு.விஞ்ஞானி.வேலாயுதம் IES, தலைவர் மாகாரஷ்ட்ரா ஒழுங்குமுறை ஆணையம்,மும்பை.2

குத்துவிளக்கு ஏற்றுபவர், திருமதி.சித்ரா வேலாயுதம் அவர்கள். இந்த விழாக்கான ஏற்பாடுகளை செய்த குழுத்தலைவர்கள், L.பாலசுப்பிரமணியன், I.ரங்கநாதர் பொறியாளர், ஆகியோர்கள் சிறப்பாக செய்துள்ளனர். தேவேந்திர குல பெருமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இந்த வரலாற்று நிகழ்வுக்காக இவ்விழாவில் தொடர்புடைய அனைத்து உறவுகளையும் மருதம் தொலைக்காட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு பாராட்டு விழா

 

கோவில்பட்டியில் உள்ள தேவேந்திர குல திருமண மண்டபத்தில், 02-10-2014 வியாழன் அன்று,  தேவேந்திரர் கல்வி அறக்கட்டளை சார்பில் “அஞ்ஞாடி” நாவல் ஆசிரியர் திரு.பூமணி அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

100_0933

வரவேற்பாளர் பேராசிரியர் இராசமாணிக்கம், திரு.சு.தங்கவேலு SBI  அவர்கள் தலைமையிலும், திரு.ஓ.எஸ்.வேலுச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திரு.கணபதி IRS  முன்னிலையில் விழா நடைபெற்றது ,திரு.சோ.தர்மன் எழுத்தாளர் ,  திருமதி.தீபா தங்கமுத்துஎழுத்தாளர், முனைவர் திரு.சிலுவைக்கொடி,  திரு.அன்பானந்தர் AEO, முனைவர் திரு. பெருமாள் (வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), மற்றும் தலைமையாசிரியர் திரு.ஜெயக்குமார் அகியோர் வாழ்த்துரை வழங்குகினார்கள்,திரு.சமுத்திரக்கனி  BSNL அவர்களால்  நன்றியுரை வழங்கப்பட்டது.

“அஞ்ஞாடி” நாவல்ஆசிரியர் திரு.பூமணி அவர்களை, மருதம் தொலைக்காட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறோம்.

தமிழக ஆளுநர் மாளிகையில் 01-10-2012 அன்று மேதகு தமிழக ஆளுநர்முனைவர் கே.ரோசய்யா அவர்களால் வெளியிடப்பட்ட மண்ணின் மரபுச் செல்வர் முனைவர் சூ.செல்லப்பா I.A.S அவர்களின் “வெளவாலின் பயணம்” நூலின் வெளியீட்டு விழா.

         

21-10-2012 அன்று கனரா வங்கி பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் நலச்சங்கத்தின் மதுரை வட்ட இரண்டாவது மாநாடு மடீட்சியா அரங்கில் நடைபெற்றது.அதில் ” சர்வதேச ஜுரிஸ்ட்” பட்டம் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி மண்ணின் மரபுச் செல்வர் திருமிகு வெ.காமராஜ் இ.கா.ப அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.