இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஷஷாங்க் மனோகர் ராஜினாமா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
 


 

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியையும் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, சவுரவ் கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஷஷாங்க் மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்­ன­தாக, 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலை­வ­ராக பணி­யாற்­றி­ இருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. 

இந்நிலையில், திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment