ஐதராபாத் மாநகராட்சி இணையதளத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஆபாச புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


 

நல்லாட்சி மையத்தால் பராமரிக்கப்படும் ஐதராபாத் நகராட்சி இணையதளத்தில் நடிகை சன்னி லியோனின் ஆபாச புகைப்படம் ஃபிளாஷ் ஆவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களும் இதனை பார்த்து அதிருப்தியடைந்து மாநகராட்சிக்கு போன் செய்து புகார் அளித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய இந்த புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து நீக்க அதிகாரிகள் நீண்ட நேரம் போராடினர். தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் நாள் முழுக்க போராடி சன்னி லியோனின் ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் நீக்கினர்.

இணையதளம் ஹேக் செய்யப்பட்டு அந்த புகைப்ப்டம் ஃபிளாஷ் ஆனதா அல்லது மாநகராட்சியில் இருப்பவர்களே இந்த செயலில் ஈடுபட்டார்களோ என்பது உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து காவல் துறையில் எந்தவித புகாரும் வராததால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Leave a Comment