விளம்பரம்

விளம்பரம்

தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் மற்றும் அணையாதீபம் வடிவமைப்பு எம் சமுதாய பொறியாளர்களிடம் இருந்து வரவேற்கபடுகின்றது

1942-ல் இந்திய விடுதலையின் இறுதிக் கட்டப் போராட்டமான “வெள்ளையனே வெளியேறு’ ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கேற்று 17 வயதே ஆன இம்மானுவேல் சேகரன் தந்தை வேதநாயகத் துடன் சிறை சென்றார். மூன்றுமாத சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தவர், ஹிட்லருக்கு எதிரான உலகப்போரில் ஈடுபடுமாறு வானொ லியில் அம்பேத்கர் விடுத்த அழைப்பினை ஏற்று இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

ஒரு வழியாக உலகப்போர் முடிவுக்கு வந்து, ஹிட்லர் ஒழிந்த பிறகு 1946-ல் மதுரையில் பாலசுந்தரராசு கூட்டிய மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை கேட்டு பன்மடங்கு எழுச்சி பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவதி கண்டு கொதித்தெழுந்தார். சாதியைச் சுட்டிக்காட்டி யே எம்மக்கள் மீது திணிக்கப்பட்ட இழிவு நடவடிக்கைகள்தான் எத்தனை? எத்தனை?

இதற்கெல்லாம் தக்கவிதத்தில் பதிலடி கொடுத்தார் இம்மானுவேல் சேகரன். மரத்தடிகளில், தோப்புகளில், வயல்வெளிகளில் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு மாறுவேடத்தில் சென்று, நேரில் கண்டறிந்து எதிர் நடவடிக்கைகளை மேற் கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டா மைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார். 1954-ல் தன் குடும்பச் சொத்தில் ஒரு பாதியை விற்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தினார். இந்தப் போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, கக்கன் மூலம் தங்கள் கட்சியில் இம்மானுவேல் சேகரனை இணைத்துக்கொண்டது காங்கிரஸ். அவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பார் கழகத்தின் முதுகுளத் தூர் வட்டாரத் தலைவர் ஆனார். 1957-ல் ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, “இந்த ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

தேவேந்திர மக்களுக்கு ஆதரவாக இத்தனைப் போர்க்குணத்துடன் இம்மானுவேல் சேகரன் அளவுக்கு தமிழகத்தில் போராடியவர்கள் யாருமில்லை. இதை உணர்ந்துதான் எம் சமுதாயத்தின் ஒற்றுமையின் முதல் முயற்சியாக இன்று உலகம் முழுவதும் பரவி வாழும் தேவேந்திர மக்கள் இந்த மாவீரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை எந்த ஒரு சுயநலமும் ,எதிர்பார்ப்பும் இன்றி மள்ளர் சமுதாயத்தை நேசிக்கும் தேசம் நண்பர்களிடம் கையளித்து இருகின்றது .

தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் மற்றும் அணையாதீபம் வடிவமைப்பு எம் சமுதாய பொறியாளர்களிடம் இருந்து வரவேற்கபடுகின்றது ,உங்கள் மணிமண்டப வடிவமைப்பு மற்றும் ஆலோசனைகள் தொடர்புக்கு : todesam@gmail.com ,+919443271989,+919677630634,+919789663418