உலகத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 
தமிழ் நிலம் காக்கப்பட வேண்டும். தமிழர் மரபு போற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு அகில இந்திய தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவர், தமிழக வரலாற்றுச் செம்மல், பேராசிரியர். முனைவர். குருசாமி சித்தர் அவர்களால் 09.09.2012 அன்று கோயம்புத்தூரில் உள்ள தமிழர்; பண்பாட்டு சமூக ஆய்வு மன்ற அரங்கில் தமிழர்களுக்காக “மருதம் தொலைக்காட்சி”; முன்னோட்ட நிகழ்வாக, இணைய தள ஒளிபரப்புச் சேவை (www.marudham.tv) துவக்கி வைக்கப்பட்டது.
 
மள்ளர் கலை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு.பொன்னையா, அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சமூக அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். திருவாளர்கள் சண்முகனார், அய்யனார், ரசிதாசன், ராஜேந்திரன், தங்கவேலு, ஆசான் ஆறுமுகம் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். “மருதம் தொலைக்காட்சி” இணைய தள சேவையினை துவக்கி வைத்த மருதம் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர். குருசாமி சித்தர் பேசுகையில், 
 
“தமிழ் நிலத்தில் மருதநிலப் பண்பாடு 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. தமிழகத்திலும், இந்தியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் வாழுகின்ற தமிழர்கள் தம் பண்பாட்டை தாய் நிலமான மருத நிலத்தில் இருந்துதான் பெற்றார்கள். இப்படிப்பட்ட வரலாறையும், பண்பாட்டையும், மரபையும், அடையாளத்தையும் மீட்டெடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்குத் தமிழர்கள் முயலவேண்டும். உலக நெல் நாகரிகத்தின் மூத்த குடியினரான மருத நிலத் தலைமக்களின் மாண்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் சமகால வேளாண் ஃ தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொண்டு தமிழர்கள் வாழ்வில் உயர்வடைய வேண்டும்.
 
 
மாறி வரும் உலகமயமாக்கல் சூழலில் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து விடக் கூடாது. தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று அழைப்பது வரலாற்று முரணாகும். நாம் தமிழினத்தின் மூத்த குடியினர். தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிக் காத்து வந்த பண்பாட்டுப் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். 
 
தமிழ்ச் சமூகம் பல்வேறு பெருமை மிக்க மரபுகளைக் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்த தமிழ் மரபினர் இன்று ஆட்சியை இழந்து அடையாளமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். இது குறித்து 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்தும், பல்வேறு சமூக அறிஞர் பெருமக்கள் ஆய்வு முடிவுகளைத் தெரிவித்திருந்தும் நமது மக்கள் வரலாற்றில் இன்னும் தெளிவு பெற இயலவில்லை.  இந்த நிலை மாற வேண்டும். ‘மருதம் தொலைக்காட்சி’ தன்னுடைய அயராத சேவையினை இன்று முதல் தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும், ஒற்றுமைக்காகவும் தொடர்ந்து செய்யும்;” என்று குறிப்பிட்டார். 
 
மேலும் அவர் பேசுகையில் “மருதம் தொலைக்காட்சி” ஒளிபரப்பைத் துவங்குவதற்காக உலக அளவில் ஊடக தொழில்நுட்ப சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுடன் சேவை ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ் மரபு மாறாமல் பொழுது போக்கு, செய்தித் தொகுப்பு, நேரலை, அரசியல், சமூகம், மெய்யியல், வேளாண்மை, மரபு, கல்வி, மருத்துவம், வணிகம், தொழில், இலக்கியம், பன்னாட்டு நிகழ்வு, விளையாட்டு, பன்னாட்டுத் தமிழர் செய்தி மற்றும் வேலைவாய்ப்பு என பன்முகப் பார்வையில் செயலாற்றும். இது உலகத் தமிழர்களுக்கான ஒப்பற்ற தொலைக்காட்சியாக விளங்கும். 
 
உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற தமிழினப் பெருமக்கள் அனைவரும் இணைந்து நின்று செயலாற்றி நமது வரலாற்றை, பண்பாட்டை, அடையாளத்தை மீட்டெடுக்கக் கூடிய வேளை வந்திருக்கிறது என்று நம்புகிறோம்” என்றும் கூறினார். தேவேந்திர குல வேளாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பரமக்குடியில் நடைபெரும் தியாகி இமானுவேல்சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியை (11.09.2012 அன்று) மருதம் தொலைக்காட்சி உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நேரலையை www.maruthamtv.net, www.maruthamtv.in, www.maruthamtv.org, www.marudhamtv.com, www.marudhamtv.net, www.marudhamtv.in, www.marudhamtv.org.ஆகிய இணைய தளங்களிலும் நேரடியாகக் கண்டுகளிக்கலாம். 
 
வெல்க தமிழ்! வாழ்க தமிழர்!!
 

This article has 58 comments

 1. K. ARULKUMARAN

  சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் மரபினரான மள்ளர்களுக்கான மருதம் தொலைக்காட்சி வெற்றி பெற வாழ்த்துகள்….. வாழ்த்துதலில் மகிழும்…. கி. அருள்குமரன், ஆசிரியர், தலைஞாயிறு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம் .  9865574648

 2. Wilson Devendran

  VALGA DEVENDRA KULLAM……………… VALGA DEVENDRA KULLA MAKKAL…………………..GURU SWAMI AYYA VALGA……….

 3. S.RAMESH

  valga nam devendra kula "marutham tv" and valarga nam  devendra kula "marutham tv.

  we wish to your postive and cultural mind thinging.

  thanks a lot,

  once again our best wishes to you and your team.(marutham tv )

   

  S.RAMESH,

  THEVARAM.

 4. M.ILAYARAJA, BHEL-TRICHY14

  Eamthu Devendra kulam Thanathu varalatrai Meetukondirukirathu…………………Vaalka devendra kulam 

 5. Devendra Singh

  தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 55-வது நினைவேந்தல் நிகழ்ச்சியை நேரலை (Live) ஒளிப்பதிவு செய்த http://www.marudham.tv, மருதம் தொலைக்காட்சி நேரலைக் குழுவினர் மற்றும் மருதம் TV நிருவனர் ஐயா குருசாமி சித்தர் அவர்களுக்கு நன்றி.

  And

  தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 55-வது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சொந்தங்களுக்கு, கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் என் மள்ளர் உறவின்முரைக்கு மனமார்ந்த நன்றிகள்.

  And

  Thank God for making the function in a peace manner and great success!

  Thanks to all

   

  இப்படிக்கு

  http://www.devendrakulavellalarsangamam.com/

   

 6. Urkavalan Jeyaprakash

  தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 55-வது நினைவேந்தல் நிகழ்ச்சியை நேரலை ஒளிப்பதிவு செய்த  மருதம் தொலைக்காட்சி நேரலைக் குழுவினர் மற்றும் மருதம் TV நிருவனர் ஐயா குருசாமி சித்தர் அவர்களுக்கு நன்றி.

 7. ஜீவன் மள்ளர்

  நல்ல முயற்சி, 

  தேவேந்திரர்ரின் தற்போது உள்ள சமுக பொருளாதார நிலையில் இருந்து நாம் நம்முடைய விடுதலையை தீர்மானிக்க வேண்டும்.

  நாம் தொடர்ந்து சேர சோழ பாண்டிய வம்சம் என்று சொல்லி கொண்டு இருந்தால் மட்டும் போதாது. மிண்டும் இந்த நாட்டை ஆளவேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடிய செயல்பாட்டை, நாம் முன் எடுத்து செல்லுகின்ற தளபதிகளாக இருக்கவேண்டும் 

  என்றும் டாக்டர் அம்பேத்கர் பணியில் 

  ஜீவன் மள்ளர் 

  094426 08416

 8. mohankumar devendran

  maraikkapatta mallar kalin varalatrai ulakathirku eduthu sollavum, nam samuthayam kalvi, tholil ponravatril munnetram kandu SAMUTHAYAM enra adippadaiyil naam otrumaiyaka irunthalum arasiyalil  pilavu pattu nirkinra devendrakula arasiyalai venredukka nam marutham  TV paadu padum ennra nambikkaiodu inru INAIYA TV yaaka seyalpadum nam marutham TV viraivil  nam ILLATHU TV yaka  matruvatharku nam sonthankal anaivarum uruthunaiyaka irukka vendum enru kettukondu ,marutham tv niruvanarum, samuthaya sinthanaiyali iya GURUSAMY SITHAR avarkalukkum,inainthu seyalpadum matra sonthankalukku en nanrikal.

 9. navin.j

  Vanakam iyya,

  iyya ….We all have the responsibility to bend and thank you for your great effort and spending your precious time for us.

  iyya…nee'ingha ko'ta'na ko'tee years vala'num…

  iyya…Ena'kuuu' na'imbee'kai irru'ku' naa'im onru'pat'tu ve'du'oim endru….

  Because we have very great persons like you ..

  iyya …remba remba nandri…for always thinking about us.

 10. Ram Perumal

  Congratulation. I am originally from Rajapalayam and currently living in London. I am very proud about opening Mallar TV

 11. Muthu Saravanan I Devendran

  vazha mallar kullam……………………………..

  தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 55-வது நினைவேந்தல் நிகழ்ச்சியை நேரலை ஒளிப்பதிவு செய்த  மருதம் தொலைக்காட்சி நேரலைக் குழுவினர் மற்றும் மருதம் TV நிருவனர் ஐயா குருசாமி சித்தர் அவர்களுக்கு நன்றி

   

  by

  Muthu Saravanan I Devendran

  9488956695

  http://www.imssofttech.jimdo.com

  • ananth

   hi friends where are you from… come to paramakudi to homage thiyagi immanuel devendhirar
   (11.09.2013)
   mallariname magudam sooda vareer.

 12. R. CHANDRASEKARAN

  Dear Sir,

                     Thank you very much for your sincere and dedicated service to our people. Long live You( Dr. Gurusamy Siddher ) and your family with God"s blessings. Continue the service to our society till the last.

  Our Devendrakula Velalar perumakkal will not forget at any cost because of your hard work for the society.Really proud of you.Heartiest congratulations to you and your team. Best of luck.

   

  Spread the Devendra kula Velalar history to the world

  Best wishes for Marutham TV

 13. parthiganesh

  mikavum arumai ayya… ungal pani thodara  engal aadaravu eppoludum undu……

   

   

  parthiganesh

   paramakudi–9790789020

 14. Suresh mallar

  Marutham eanra peyarai thol.”thi”-edam pari pogamal thaduthu namathu varalatrai kappatriyamaikku valum varalarukku manamarntha nanrikal… Eanrum samuthaya paniel Sureshmallar. Thanichiyam, madurai-dt

 15. Selvakumar mallar

  என் தமிழ் இனத்திர்க்காக ஒரு தொலைக்காட்சி மருதம் தொலைக்காட்சி மிக்க சந்தோசம் இப்படி ஒரு தொலைக்காட்சி இருக்கிறது என்று இணையதளத்தின் மூலம் தான் நான் அறிந்துக் கொண்டேன். நான் சென்னையில் வசிக்கிறேன் ஆனால் இங்கு மருதம் தொலைக்காட்சி தெரிவதில்லை அதர்க்கு என்ன செய்ய வேண்டும் கேபில் செயளாலரை அனுக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட கேபில்களுக்கு மட்டும் தான் தெரியுமா என விரிவாக விளக்கம் அளிக்கவும்.- ஐயா சித்தர் குருசாமி அவர்களுக்கு மிக்க நன்றி.

  • admin

   வணக்கம், தங்களின் தொடர்புக்கு நன்றி! வலைத்தளத்தை இன்னும் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் உதவியும் தேவை. மருதத்தில் புதுமையான மற்றும் தேவையானவற்றை வெளிக்காட்ட நீங்கள் ஒத்துழைக்கலாம். என்ன வரவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் ஆலோசனைகளைச் சொல்லலாம். மற்றவர்களிடம் மருதத்தைப் பார்க்கச் சொல்லவும். கருத்துகள் படைப்புகள் அனுப்பவும் உதவி செய்யலாம். செய்யுங்கள். நாம் வெல்லவேண்டும்!. மருதத்தின் நன்றி!

 16. U.Jeyaprakash

  Dear relatives

  The below requirements are Lecturers for Academic year (2013-14) starting from September 2013. Selected candidates will be deputed to work at Government Technical Colleges belonging to Ministry of Manpower, Sultanate of Oman.

  To apply : Go to the following web site:
  http://www.manpower.gov.om/job_application/

  Last date of submission applications : 25.03.13

  College websites for your reference:

  This below colleges coming under the ministry of manpower.

  http://www.hct.edu.om
  http://www.nct.edu.om
  http://www.act.edu.om
  http://www.ict.edu.om
  http://www.ibricct.edu.om
  http://www.shct.edu.om
  http://www.sct.edu.om

  For detailed regarding the job vacancies kindly log on to : http://www.manpower.gov.om

  Dear Relatives kindly use this opportunity and take this message to our relatives and villagers those who are seeking the relevant job.

  Regards
  U.Jeyaprakash
  Muscat
  Oman

 17. alaguraja.E

  Matra tv pola namathu tv yum makkalai thirumbi parkkumaru irukkaveandum.naame muthal jaathi .matravargal pin adaiyalam vaithukondaargal .makkalukku aathaarathodu kaatchigalaaga puriyavaikkaveandum.valarattum. Nandri .

 18. selvan

  we request that our community leader, please organized our community bank the bank should be developed in the next level financial development in our community
  selvan
  9944971419

 19. சங்கிலி செ.இரா.செல்வக்குமார் மூப்பன் - நக்கசேலம் நாடு - பெரம்பலூர் மாவட்டம் - சோழ மண்டலம்

  வயலும், வயல் சார்ந்த “மருத நிலத்திலே ” தோன்றி, உலகெங்கும் நாகரிகத்தை பரப்பிய தொல் தமிழ் குடியான —- சேர, சோழ, பாண்டிய வம்சத்தை தோற்றுவித்து அரசாட்சி செய்த — மூப்பன், குடும்பன், கடையன், காலாடி, வாதிரியர், பண்ணாடி, மண்ணாடி, தேவேந்திர குலத்தான் என்று பல சிறப்பு பெயர்களை தாங்கி வாழும் “மள்ளர்” எனும் “தேவேந்திர குல வேளாளர்” இழந்த பெருமையை, உலகறிய செய்யும் மருதம் தொலைக்காட்சிக்கும், அய்யா குருசாமி சித்தருக்கும் கோடான கோடி நன்றிகள்…!!!

 20. Sureshkumar Devandran

  nammudiya makkazukkaga thodanga patta indha tv menmelum valarnthu intha ulagil anivarum valthavendum endru nan veandigolkeran.

  really very happy to introduce for us, thank you Dr. gurusamy siddhar

 21. CT limousine bus

  I loved as much as you will receive carried out right here.
  The sketch is attractive, your authored material stylish.

  nonetheless, you command get got an impatience over that you wish be delivering the following.
  unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside
  case you shield this hike.

  Feel free to surf to my site CT limousine bus

 22. Download Angel Stone Carats Hack Tool

  Excellent way of explaining, and pleasant piece of writing to get facts about my presentation focus, which i am going to convey in college.Download Angel Stone Carats Hack Tool
  [url=http://angelstooneblog.jigsy.com/entries/general/angel-stone-hack-v1-2-9-free-carats]Download Angel Stone Carats Hack Tool[/url]

Leave a Comment