உலகத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்…
‘மருதம் தொலைக்காட்சி’ (மண்ணின் மரபு).தமிழ் நிலம் போற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு துவங்கப்பட்டிருக்கிறது.  தமிழர்களின் வாழ்வும், வளமும், நேரமும் பயனுள்ளதாக மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணங்களையே  விதையாக்கி  துவங்கப்பட்டிருக்கிறது.
26.02.1996 அன்று ‘மருதம் இன்;டர்நேஷனல்’ என்ற பெயருடன் திரைப்படம், குறும்படங்கள் இயக்குவதற்காக  துவங்கப்பட்ட நிறுவனம்,  பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மருத நிலப் பண்பாட்டு விதையுடன் தொலைக்காட்சி மற்றும் இணைய சேவை அரங்கில் கால் பதிக்கின்றது.
உலகமெங்கும் இருக்கும் தமிழ்க்குடிகளின் பண்பாடு, வரலாறு சார்ந்த ஊடகத் தேவையை நிறைவேற்றும் வகையில் ‘மருதம் தொலைக்காட்சி’ (மண்ணின் மரபு)  அதன் நிகழ்ச்சிகளின் ‘தமிழுக்கும், தமிழர் மரபுக்கும்’ முதன்மை செய்கின்றது.
வெல்க தமிழ்!   வாழ்க தமிழர்!!